இந்தியாவின் தாக்குதல்களால் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டமைப்பு சீர்குலைந்துள்ள நிலையில், புதிய ஆயுதங்களை வாங்குவதில் அந்நாடு மும்முரம் காட்டி வருகிறது.
இந்தியாவை எதிர்கொள்வதற்கு தேவையான ராணுவ கட்டமைப்பு இல்லாததால் ஆபரேஷன் சிந்தூரின் போது பெருத்த சேதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நிறுத்திவைத்துள்ள நிலையில், சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து தற்கொலை டிரோன்கள், லாஞ்சர்கள் போன்ற ஆயுதங்களை வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.