America 
உலகம்

குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு

தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Web Team

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல் யார், தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.