தாய்லாந்தில் உயிரோடு இருந்த மூதாட்டியை தகனம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாங்காக்கில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 65 வயது மூதாட்டியை, சவப்பெட்டியில் வைத்து மூடிய நிலையில், திடீரென சவப்பெட்டியை தட்டும் ஒலியைக் கேட்டு ஊழியர்கள் அதனை திறந்தனர். அப்போது மூதாட்டி உயிருடன் இருந்ததை கண்டு அனைவரும் திகைத்து போயினர்.