பாகிஸ்தான் 
உலகம்

பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகப் போக்குவரத்து

எல்லை வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளின் வணிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

Manigandan Raja

வர்த்தகப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

  • பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரக்கு வாகனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எல்பிஜி விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.
  • எல்லை வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளின் வணிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை

  • இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை பாகிஸ்தான் நவம்பர் 24, வரை நீட்டித்துள்ளது. இந்த முடிவால் இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமானப் பயண வழித்தடங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பயண நேரமும் செயல்பாட்டுச் செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலுக்கு சீல் வைப்பு

  • பாகிஸ்தானில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் பகுதியில் அமைந்துள்ள ராம் லீலா கோவிலை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட முயற்சி நடைபெற்றது.
  • இதற்கு ஹிந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அதிகாரிகள் அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீல் வைத்தனர்.