USA Fire accident 
உலகம்

அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத தீ விபத்து

திடீரென சஹாஜா தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Web Team

அமெரிக்காவின் அல்பெணி நகரில் அடுக்குமாடி குயியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சஹாஜா உடுமாலா அல்பெணி நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். சகமாணவிகளுடன் சேர்ந்து வெஸ்ட் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். திடீரென சஹாஜா தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சக மாணவிகள் உயிர் பிழைத்தனர்.