புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் Kristi Noem, ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்பு, வன்முறை மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்ற கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.