ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்த படைகளை திரும்பப் பெருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதால் சவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் படைகளை திரும்ப பெறும் முடிவை ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளது.