

செய்தியாளர் சந்திப்பில் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட விவகாரத்தை நடிகை கௌரி சிறப்பாக கையாண்டார் என நடிகர் ஆனந்தராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில், தாம் ஹீரோவாக நடித்துள்ள மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.