ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் இடம் பிடித்த அஜித்குமாரின் கார்ரேஸ் அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் குமார் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகள் எனவும், சர்வதேச போட்டியின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Logo-வை, பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.