Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியிடம் ஒன்றரை கிலோ தங்க நகைகளை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த விஜயராஜா, அங்கு தங்க நகைகளை வாங்கி காரைக்குடியில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்.
திங்கட்கிழமை இரவு காரைக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள்,
பழைய சிவன் தியேட்டர் அருகே நகை பையை பறித்து சென்றதாக விஜயராஜா, காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved