news-tamil-logo

3/15/2026, 11:34:49 AM

news-tamil-logo
more
Home districtnews அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு - பாதியில் நின்ற கூட்டம்
tv

Also Watch

tv

Read this

அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு - பாதியில் நின்ற கூட்டம்

திண்டிவனம், விழுப்புரம்

Posted on: Feb 16, 2026 04:14 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TDM Meeting issue

பாதியில் நின்ற கூட்டம் :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற ஆலோசனை கூட்டம் திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது 21 வது வார்டு கவுன்சிலர் தீபா விக்கிரம சிங் தனது பகுதிக்கு நீண்ட நாட்களாக அங்கன்வாடி கட்டிடம் இல்லை என்றும்.

அங்கன்வாடி கட்டிடம் வேண்டி கடந்த முறை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் நகர் மன்ற தலைவரிடம் முறையிட்டு வெளிநடப்பு செய்தார் அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடுக்கப்பட்டது.

இதை 20 -வது வார்டு கவுன்சிலரான ரம்யா ராஜா கட்டுமான பணிக்கான டெண்டர் எடுத்துள்ளார் ஆனால் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 21வது வார்டு கவுன்சிலரான தீபா அவர்கள் அங்கன்வாடி கட்டிடத்தின் பணிகள் குறித்து நகர மன்ற தலைவரிடம் கேட்டபோது அதற்கு இருபதாவது வார்டு கவுன்சிலரான ரம்யாவராஜா அவரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளர்.

இதனால் நகர் மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது 21வது வார்டு கவுன்சிலர் ஆதரவாக மற்ற கவுன்சிலர் களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகர்மன்ற கூட்டமே பரபரப்பாக காணப்பட்டது இதனைத் தொடர்ந்து ரம்யா ராஜா பேசுவதை கண்டித்து அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நகர் மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சர்களும் ரம்யாராஜன் செயலை கண்டித்து சேர்மானிடம் முற்றுகையிட்டு வாக்குவதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
13 mins agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved