கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரிக்கும் சிபிஐ

தவெக மாநில நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.
KRR DSP Selvaraj
KRR DSP Selvaraj
Published on: 

கரூர் சம்பவம் தொடர்பாக, டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்கள். கடந்த செப்டம்பர் மாதம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறித்து, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், வியாபாரிகள், அப்போது காவலில் இருந்த காவல்துறையினர், மீட்பு பணியில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது. தவெக மாநில நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.

newstamil.tv