48
48

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்த நீதிமன்றம்..

ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேங்கள் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on: 

ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேங்கள் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, பல கோயில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடப்பதாக தெரிவித்துள்ளது.

கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல, தெய்வங்கள் குடியிருக்கும் அங்கம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுரைத்த நீதிமன்றம், புனரமைப்பு பணி முடிந்த பிறகு தகுதி சான்றிதழ் பெற்று பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

newstamil.tv