news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு
tv

Also Watch

tv

Read this

மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு

கரியமங்கலம், திருவண்ணாமலை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாதாந்திர சுங்கக்கட்டணம்

மாதாந்திர சுங்கக்கட்டணம் உயர்வு :

சுங்கச்சாவடி மாதாந்திர பாஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கும் கனரக வாகன ஓட்டிகள்.

மத்திய அரசு சுங்கச்சாவடி மாதாந்திர பாஸ் கட்டண உயர்வை மறுபரிசலினை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் NH 77 பெங்களூர் திருவண்ணாமலை சாலையில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடியில்.

மாதாந்திர கட்டணத்தில் LCV என்று சொல்லக்கூடிய 12 டன் எடையுடன் கூடிய commercial வாகனங்களுக்கு பழைய கட்டணம் 3165 ஆக இருந்த நிலையில் தற்போது ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 3170 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் ட்ரக், பஸ், உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் 6635 ரூபாயாக இருந்த நிலையில் ஐந்து ரூபாய் கூடுதலாக்கப்பட்டு 6640 ரூபாய் கட்டணமாகவும்.

3 AXCE Commercial மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 7235 ஆக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு 7,245 ரூபாயாகவும் HCM OR EME கனரக வாகனங்களுக்கு 10405 ரூபாயிலிருந்து பத்து ரூபாய் உயர்த்தி 10415 ரூபாயாக நள்ளிரவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில் பாஸ்ட் ட்ராக் கட்டணங்கள் விலை உயரவில்லை மாதாந்திர பாஸ் கட்டணம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை உயர்வு என்பது ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்படுவது என்று கூறுகின்றனர்.

தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மாதாந்திர கட்டண உயர்வு என்பது மேலும் சாமானிய மக்களுக்கு ஒரு நிதி சுமையை ஏற்படுத்தும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பெங்களூரில் இருந்து செங்கம் திருவண்ணாமலை வழியாக விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பண்ருட்டி கடலூர் என கனரக வாகனங்கள் பெங்களூர் கிருஷ்ணகிரியில் இருந்து காய்கறிகள் விலை உயர்ந்த பூக்கள் கொண்டு செல்லப்படுவதால் காய்கறிகள் மற்றும் பூக்களின் விளையும் உயரும் இது ஏழை எளிய மக்களையே பாதிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

1
4 hrs 15 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved