Also Watch
Read this
By: Manigandan Raja

பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு குளறுபடிக்கு மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் மத்திய அரசின் நிர்வாக திறமை என்றைக்கு
உதாரணமாக இந்த சிபிஎஸ்சி தேர்வு குளறுபடி திகழ்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.
ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அந்த பேட்டியின் போது சிபிஎஸ்சி தேர்வு குளறுபடிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இந்த குளறுபடிக்கு காரணமான மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை செய்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 26 சதவீதம் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வேண்டும் அது மட்டும் இன்றி விலைவாசி உயர்வை குறைக்க நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணத்தை அரவை நீக்க வேண்டும் அல்லது பாதியாக குறைக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படத்தை வெளியிட புதுக்கோட்டை காவல்துறை தடுத்து வருகிறது கருத்து சுதந்திரத்திற்கு தமிழக அரசு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு வலுவான கருத்துக்கள் எதையும் தெரிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டு காலம் திமுக சிறப்பாக ஆட்சி செய்து உள்ளது திமுக அணியிலிருந்து வெளியேற மாட்டோம் தொடர்ந்து திமுக அணியிலேயே பயணம் செய்வோம் நாங்கள் தனிச்
சின்னத்தில் போட்டியிட்டு இருந்தாலும் தவெகவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்போம்.
தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வது கண்டனத்துக்குரியது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு நடந்து கொண்ட விதம் ஏமாற்றத்தை தந்துள்ளது இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்திருப்பது தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved