news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி
tv

Also Watch

tv

Read this

கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

அய்யம்பட்டி, சிவகங்கை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு போட்டி : 

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு போட்டி
வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, ஊரின் முக்கியஸ்தர்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டு திடலுக்கு வருகை தந்தனர். தொடர்ந்து கோவில் காளைக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டு
அவிழ்த்து விடப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, மேலூர், புதுக்கோட்டை, சிங்கம்புணரி, பொன்னமராவதி, மதகுபட்டி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழு சார்பில் சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காளைகள் முட்டியதில் 20 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்நிகழ்ச்சியை காண சாலைக்கிராமம், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் சாலைக்கிராமம் காவல் நிலைய காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Related Link
விடுமுறை காரணமாக தஞ்சை கோவிலில் குவிந்த கூட்டம்

விடுமுறை காரணமாக தஞ்சை கோவிலில் குவிந்த கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 42 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved