Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோரையாரு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் பல கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பையூர் கிராமத்தில் கோரையாறு உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழே லாரி மற்றும் மாட்டு வண்டிகள் செல்லும் அளவிற்கு பாதைகள் அமைத்து நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் மணல் கடத்தல் நடப்பதாகவும், ஒரு வண்டிக்கு 500 ரூபாய் வீதம் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved