news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் மின்தடை
tv

Also Watch

tv

Read this

பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் மின்தடை

பெருங்குடி, சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் மின்தடை

மருத்துவமனையில் மின்தடை : 

சென்னை  ஓஎம்ஆர் சாலை பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில், திடீரென ஏற்பட்ட நீண்ட நேர மின் துண்டிப்பு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை எனப் புகார் மருத்துவமனையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முழுமையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெரிய தனியார் மருத்துவமனையில் அவசர கால மின் தேவைக்கான ஜெனரேட்டர் (Generator) வசதி கூட இயக்கப்படவில்லை என்று நோயாளிகளின் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.


​இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாகவும் மெத்தனமாகவும் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மருத்துவமனை வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

​மிகவும் ஆபத்தான கட்டத்தில், ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மின்சாரப் பாதிப்பால் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் முடங்கியதாகத் தெரிகிறது.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, மருத்துவப் பணியாளர்கள் கைகளால் இயக்கக்கூடிய 'அம்பு பேக்' (Ambu Bag) பலூன் மூலம் அவசர அவசரமாக ஆக்சிஜன் செலுத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Link
ஆதம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு

ஆதம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
3 hrs 31 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved