Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நாட்டாறு பகுதியில் வேகமாக சென்ற ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின்கம்பம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதிய நிலையில், பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved