Also Watch
Read this
By: Manigandan Raja

தாம் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியது விஜய்தான் எனவும், தனது உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காகத்தான் எனவும் கூறி, தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கண்கலங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தார். ஒரு நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்றலாம், ஆனால் பல நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்ற முடியாது என்பது இபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved