திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்டிக்கரை ஓட்டி பணம் கொள்ளையடித்த உத்தரப் பிரதேச மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மாங்கால் கூட்டு சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த சிவம், சுசில்ராஜ்புட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை செலுத்தி பணம் எடுக்கும்போது, பணம் வெளியே வராத வகையில் ஸ்டிக்கரை ஒட்டி இருவரும் திருடி வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் இயந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சித்த இருவரையும், சிசிடிவி பதிவு மூலம் பிடித்து விசாரித்ததில், அவர்களின் தொடர் திருட்டு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.