Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மோனோ ரயில் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மைசூரு காலணி - பக்தி பார்க் ஸ்டேஷன் வழித்தடத்தில் சென்ற மோனோ ரயில், மாலை 6.15 மணியளவில் செம்பூர் அருகே திடீரென பழுதாகி நின்றது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் பழுதாகி நின்றதால் அதிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், கிரேன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில், மின் தடை காரணமாக மோனோ ரயில் பழுதாகி நின்றதாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved