Also Watch
Read this
By: Web Team

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கிடுக்குப்பிடி கேள்விகளால் அம்மாநில அரசை துளைத்தெடுத்தது.
தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், எதிர்காலத்திலும் இதுபோன்று துயரம் நடந்தால், தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் உள்ளதா? என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு அணி நிர்வாகம் அனுமதி கேட்டனரா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியது.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, நீதிமன்றத்தின் அறிவுரைபடி செயல்படும் என தெரிவித்ததோடு, வெற்றி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்த பெங்களூரு அணி நிர்வாகம்தான் பாதுகாப்பையும் ஏற்றதாக வாதத்தை முன்வைத்தது.
இதனையடுத்து கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தவிட்டு வழக்கை 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved