அரசியலமைப்பைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பீகாரின் பூர்னியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி தேசிய ஜனநாயக கூட்டணி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் ஓட்டு திருட்டு செய்வதில் ஈடுபடுவதாக சாடினர். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீகார் இளைஞர்களின் பொறுப்பு என தெரிவித்த ராகுல், ஆதலால் வாக்குச் சாவடிகளில் தாங்கள் அனைவரும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றார்.