Also Watch
Read this
By: Pari karthick

நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக இந்தியா கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளது என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு சுதர்சன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடிய "சல்வா ஜூடும்" என்ற அமைப்பு சட்டவிரோதமானது என சுதர்சன் ரெட்டி தீர்ப்பளித்ததாக உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த சுதர்சன் ரெட்டி, அந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது என்றும், இது குறித்து அமித்ஷாவுடன் விவாதிக்க தயாராக இல்லையென்றும் பதிலளித்தார்.
இதையும் படியுங்கள் : தர்மஸ்தலா வழக்கில் மிகப்பெரிய திருப்பம் புகாரளித்தவரையே கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved