ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தை குறி வைத்து உக்ரைன் தாக்குதல்

மேலும், தொடர் பேச்சுவார்த்தை மூலம் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.!
Modi sad
Modi sad
Published on: 

ரஷ்ய அதிபர் புதினின் இல்லத்தை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.! திங்களன்று புதினின் இல்லம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியது எனவும், 91 டிரோன்கள் இடை மறித்து அழிக்கப்பட்டது எனவும் ரஷ்யா தெரிவித்த நிலையில், இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும் என
பிரதமர் மோடி வலியுறுத்தினார்.! மேலும், தொடர் பேச்சுவார்த்தை மூலம் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.!

newstamil.tv