போட்ஸ்வானாவில், இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன. வரும் வாரங்களில், இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் இந்த சிவிங்கி புலிகள், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படவுள்ளன. "இந்தியா-போட்ஸ்வானா உறவு 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது"போட்ஸ்வானாவின் கபரோன் நகரில்(gaborone) இந்தியர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு மேம்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது போட்ஸ்வானா(BOTSWANA)நாட்டில் இந்தியர்களிடையே உரையாற்றும் முன்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.