news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இபிஎஸ் விமர்சனம்
tv

Also Watch

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இபிஎஸ் விமர்சனம்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை என்று, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சியில் ரீல்ஸ்
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
தவெக அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்று, 85 நாட்களாகியும் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. வெறும் வசனங்களை பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சியில் ரீல்ஸ், மீம்ஸே சாதனையாக பார்க்கப்படுகிறது.

பழைய திட்டங்களின் பெயரை மாற்றி...
தேர்தல் நேரத்தில் தவெக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் 22 லட்சம் ரூபாயில் மருத்துவக் காப்பீடு திட்டம் என்றார்கள், ஆனால் ஏமாற்றம். நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறையை எப்படி சரி செய்யப் போகிறார்கள்? என்பதை கூறவில்லை.
பட்ஜெட் என்ற பெயரில் பழைய திட்டங்களின் பெயரை மாற்றி அறிவித்துள்ளனர்.

6 இலவச சிலிண்டர் என்ன ஆனது?
கடன் வாங்கி மட்டுமே திட்டங்களை செயல்படுத்தக்கூடிய நிலையில் தவெக அரசு உள்ளது. குழு அமைத்துவிட்டால் மாநில வருவாயை பெருக்கிவிட முடியுமா? திமுக, அதிமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் தவெக அளித்த 6 இலவச சிலிண்டர் வாக்குறுதி என்ன ஆனது? மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுகவின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் பெயரை மாற்றி அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. பயிர்க்கடன் தொடர்பாக தவெக அரசு வெளியிட்ட அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை. கடன் வாங்கவே நிபுணர் குழுவை தவெக அரசு அமைத்துள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved