

கோலாலம்பூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், நள்ளிரவில் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்ட நிலையில், அதனை கண்டறிந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதை அடுத்து அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
விமானத்தில் 158 பயணிகள் உள்பட 166 பேர் பயணித்த நிலையில், கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, இன்று மாலை விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.