news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமளிக்கு மத்தியில், ஆன்-லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா
tv

Also Watch

அமளிக்கு மத்தியில், ஆன்-லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா

டெல்லி

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
parliment

ஆன்-லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரின் 20ஆம் நாளான இன்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின.

மக்களவையில் அமளி, மசோதா தாக்கல்:

மக்களவை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அவையை நண்பகல் 12 மணிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பின்னர், 12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், ஆன்-லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025ஐ, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.

அபராதம், சிறை தண்டனை:

ஆன்-லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா, ஆன்-லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும்.

இவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும். ஆன்-லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும் எனத் தெரிகிறது.

அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளது.
புதிய மசோதாவின்படி, ஆன்-லைன் சூதாட்டத்துக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

மசோதா நகல்கள் கிழிப்பு:
இந்த நிலையில், மக்களவையில், ’30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும்’ என்ற மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு சிலர் மசோதா நகல்களை கிழித்து எறிந்து கூச்சல் போட்டனர்.

மாநிலங்களவையிலும் தொடர் அமளி:
மாநிலங்களவையிலும் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். மாநிலங்களவை மீண்டும் 12 மணிக்கு கூடிய போதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Top Gear-ல் மேலே சென்ற தவெக - அதிர்ச்சியில் அறிவாலயம்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved