ஹாம்பர்க் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி,ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 6க்கு 4, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.