news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - பெருமை சேர்த்த மாணவி
tv

Also Watch

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - பெருமை சேர்த்த மாணவி

ஜெய்ப்பூர்

73

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
manika

ஜெய்ப்பூரில் நடைபெற்ற "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025" போட்டியில், ராஜஸ்தானைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மனிகா, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

அரசியல் அறிவியல் படிக்கும் மாணவி:

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகரில் பிறந்த 23 வயதான மனிகா, தற்போது அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தை வென்றவர். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பாக BIMSTEC Sewocon-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இவர், பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் ஓவியர். லலித் கலா அகாடமி மற்றும் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் போன்ற நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மன நல குறைபாடு பற்றிய புரிதலை அதிகரிக்க நியூரோனோவா (Neuronova) என்ற அமைப்பை நிறுவியுள்ளார். ADHD போன்ற குறைபாடுகளை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.

தமது வெற்றி குறித்து மனிகா கூறியதாவது:

எனது சொந்த ஊரான கங்காநகரில் இருந்து, எனது பயணம் தொடங்கியது. நான் டெல்லிக்கு வந்து போட்டிக்குத் தயாரானேன். நமக்குள் நம்பிக்கை, தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அனைவரும் பெரும் பங்கு வகித்தனர். எனக்கு உதவி செய்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை மாற்றிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். போட்டி என்பது வெறும் ஒரு துறை மட்டுமல்ல, அது ஒரு நபரின் குணத்தை உருவாக்கும்.

இவ்வாறு மனிகா தெரிவித்துள்ளார்.

’மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான்’ பட்டத்தை அடுத்தவருக்கு வழங்கிய அதே நாளில், தான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா இறுதிப் போட்டிக்கான தேர்வில்(auditions) பங்கேற்றதாக மனிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு அத்தியாயம் முடிந்து, அதே நாளில் அடுத்த அத்தியாயம் தொடங்குவது தற்செயல் நிகழ்வு அல்ல. இது சீரான முன்னேற்றம். வளர்ச்சி என்பது ஓய்வுக்காக காத்திருக்காது என்பதை இது நினைவூட்டுகிறது," என்று மனிகா தனது பதிவில் உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்கம், தாராபுரம் இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved