news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
tv

Also Watch

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்

திரை உலகம் இரங்கல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.
இந்த மாத தொடக்கத்தில், தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, கடந்த 1960ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973ஆம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987ஆம் ஆண்டு இவர் நடித்து 9 படங்கள் வெளியானது. இதில், அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.
இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தர்மேந்திரா கடைசியாக 2023இல், கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்தார்.
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுவிட்சர்லாந்தில் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகும் - பிரதமர் மோடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved