news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்வு
tv

Also Watch

22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்வு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், 2 நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. 22 காரட் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 15
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 16
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 18
ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 14 - ரூ.1,05,200
ஜூலை 15 - ரூ.1,05,440
ஜூலை 16 - ரூ.1,05,200
ஜூலை 17 - ரூ.1,04,800
ஜூலை 18 - ரூ.1,05,080 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 18072026

இன்றைய ராசி பலன்கள் 18072026

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved