பீகாரின் பிரபலமான சாத் பூஜையை, இந்தியா கூட்டணி அவமதித்து விட்டதாக, பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். பீகாரின் முசாபர்பூரில் நடந்த என்டிஏ கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், சாத் பூஜையை வாக்குகளுக்காக பயன்படுத்தி, கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை இந்தியா கூட்டணி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பீகாரின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து விட்ட சாத் மகாபர்வாவுக்கு யுனெஸ்கோவின் காலாச்சார அந்தஸ்து பெற தமது அரசு முயற்சித்து வருவதாகவும் மோடி பேசினார்.காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் பகையை வளர்ப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், சமூக ஒற்றுமை இருக்காது என்பதுடன் வளர்ச்சியும் ஏற்படாது என கூறினார். ஊழலில் திளைக்கும் இந்த கட்சிகளால் சமூக நீதி எட்டப்படாது என்ற மோடி, ஏழைகள் சுரண்டப்பட்டு சில குடும்பங்கள் மட்டுமே செழிப்பதாகவும், அவர்கள் பீகாருக்கு எதையும் செய்ய மாட்டார்கள் எனவும், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.