news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரஷ்யா, உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர், பிடிவாதமாக இருக்க காரணம் இது தான்
tv

Also Watch

ரஷ்யா, உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர், பிடிவாதமாக இருக்க காரணம் இது தான்

கண்ணை உறுத்தும் "கிரிமியா"

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ukraine

உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா, ட்ரோன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 14 வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாகிட்டயும் பேசியாச்சு, உக்ரைன் கிட்டயும் பேசியாச்சு. ஆனா, பிடி கொடுக்க மாட்டேங்கிறாங்களேன்னு அமெரிக்க அதிபர் தலைவலியில தவிக்கிறாரு.

கிட்டத்தட்ட 3 வருஷமா ரஷ்யா, உக்ரைன் இடையே போர் போயிட்டிருக்கு. எத்தனையோ காரணம் போருக்காக சொல்லப்பட்டாலும், அதுல ஒரு காரணம் தான் கிரிமியா (Crimea).

மூணு வருஷமா நடக்குற போருக்கு இந்த நிலப் பரப்பு தான் காரணம்.  இந்த கிரிமியா எங்க இருக்கு?

உக்ரைன் நாட்டோட தெற்கு பகுதியில, கருங்கடலில, இருக்குற ஒரு அழகான தீவு. அதாவது 2014ஆம் வருஷத்துல, ரஷ்ய படைங்க இத சட்டவிரோதமா இணைச்ச பிறகு, இப்ப ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில இருக்கு.

உக்ரைனோட கடற்கரையில கிரிமியா இருக்கிறதால, உக்ரைன் விட்டுடுமா என்ன.?


இதுல பார்க்க வேண்டியது என்னன்னா... 2014ஆம் வருஷம், பிப்ரவரி மாசத்துல, கிரிமியாவை ஆக்கிரமிச்சப்ப, ’இதுல எனக்கு தொடர்பில்ல சாமி’ன்னு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சொல்லியிருக்காரு...

அந்த சமயத்துல, அடையாளம் தெரியாத பச்ச நிற உடையில வந்த முகமூடி அணிந்த மர்ம கமாண்டோக்கள், அங்கயிருக்கிற உள்ளூர் சட்டமன்றத்த கைப்பற்றி, தீவு முழுசும் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டாந்தாங்க...

"லிட்டில் க்ரீன் மென்"ங்கி அவங்க தான், பிள்ளையார் சுழி போட்டு, ரஷ்ய, உக்ரைன் போரை தொடங்கி வச்சாங்க...

இந்த போரு, 2022ம் வருஷத்துல, உச்சகட்டத்த எட்டுச்சு...

பெரியண்ணன்-ன்னு பேரு வச்சிருக்கிற அமெரிக்க அதிபர் டிரம்பு, கிரிமியா-ங்கிறது எப்பவோ தொலைஞ்சு போச்சு, அமைதி பேச்சுவார்த்தையில அது ஒரு விஷயமே இல்லைன்னு, அசால்ட்டா சொல்லிட்டாரு.

விடுவாரா உக்ரைன் அதிபரு. "பிரிக்க முடியாதது எதுவோ"ங்கிற பாணியில, விட்டுத் தரமுடியாதுன்னு விடாப்பிடியா இருக்காரு.

இப்பதான் பூனைக்குட்டியும் வெளிய வந்திருக்கு... லிட்டின் கிரீன்மென்-ங்கிறது ரஷ்ய படை தான்னும் தெளிவாயிருக்கு.


ரஷ்யாவுக்கும் கிடையாது, உக்ரைனுக்கும் கிடையாது கிரிமியான்னு அமெரிக்கா பஞ்சாயத்து பண்ணுதாம்.

போர் தொடங்கினப்ப, கிரிமியா விஷயத்துல உக்ரைனை ஆதரிச்ச அமெரிக்கா, இப்பவும் அதே போல இருக்கணும்னு உக்ரைன் அதிபர் நினைக்கிறாரு.

இதே போல, வரலாற்று காரணத்தால, கிரிமியாவ தங்கள் நாட்டோட ஒரு பகுதியா ரஷ்யர்கள் நினைக்குறாங்க.

கடந்த 1991ஆம் வருஷத்துல, சோவியத் யூனியன் சிதைஞ்சப்ப, கிரிமியா உள்பட உக்ரைனின் மற்ற பகுதிகள்ல சுதந்திரம் பெற வாக்களிச்சாங்க.


ஆனா, கிரிமியாவுல ரஷ்ய தரப்பு மேற்கொண்ட செயல்பாடுகள, தொடர்ந்து நடக்கும் ஆக்கரிமிப்புன்னு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சொல்லியிருக்கு.

பெரியண்ணன் மனப்பான்மை கொண்டவங்கன்னு சொல்லிக்கிற அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுங்க, பெருந்தன்மையோட நடந்துக்குங்கன்னு, போருல பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமுறாங்க...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved