news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம்"
tv

Also Watch

"ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம்"

இபிஎஸ் கண்டன அறிக்கை

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆட்சி முடியும் தருவாயில், விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டது தான் தாயுமானவர் திட்டம். அதிமுகவின் நகரும் ரேஷன் கடை திட்டத்தில் தெளிவு இருந்தது. மலை கிராமங்கள், தொலை தூர கிராமங்களில், பகுதி நேர நியாய விலைக் கடைகள், குறைந்தளவு குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகள் என்று, 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு காப்பி-பேஸ்ட் செய்து, புதுப்பெயரை சூட்டி அரசுப் பணத்தில் பல கோடி ரூபாய் வெற்று விளம்பரப்படுத்துவதை தான் இந்த அரசு செய்கிறது. பிப்ரவரி மாதம் 2024ல் அறிவிக்கப்பட்ட தாயுமானவர் திட்டம், ஆட்சி முடியும் தருவாயில் தொடங்கப்பட்டுள்ளது.

மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்கும் வெற்று ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை; சுயமாக சிந்தித்து மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களைத் தீட்டுபவர்களே தமிழகத்திற்கு தேவை.

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved