Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 04:35 PM
By: Manigandan Raja

யூத சமூக ஆம்புலன்ஸ்கள் :
லண்டனில் யூத சமூக ஆம்புலன்ஸ்கள் தீக்கரையாக்கப்பட்டன. அவசரகால மருத்துவச் சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்பான 'ஹட்சோலா நார்த்வெஸ்ட்' ((Hatzola Northwest))ஐச் சேர்ந்த நான்கு ஆம்புலன்ஸுகள் சேதமடைந்ததாக லண்டன் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
யூத மக்கள் அதிகம் வசிக்கும் லண்டன் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் நடந்த இந்த சம்பவத்தில் வாகனங்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததில், அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல்கள் உடைந்ததாகவும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற லண்டன் காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved