அழுகிய சடலங்கள்..! பின்னணியில் பகீர் MASTER PLAN..!
தருமபுரி வெத்தலகாரன்பள்ளம் அருகே புதிதாக அமையுள்ள சிப்காட் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர். உடலெல்லாம் வெட்டு காயங்களும் கத்தியால் குத்தப்பட்ட தடயங்களும் இருந்ததால் கொலை என உறுதிப்படுத்திய போலீசார் முதல்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து INVESTIGATION-ஐ தொடங்கினர். அப்போது சடலங்கள் கிடந்த பகுதி சேலம்-பெங்களூர் பைபஸ் சாலையை ஒட்டிய, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி என்பதால், வழக்கத்திற்கு மாறாக அவ்வழியாக சென்ற கார் போலீசாரின் சந்தேகத்தை தூண்டியது. இதையடுத்து காரை துருப்பாக வைத்து தேவராஜ், அஸ்வின் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
சடலமாக கிடந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதோடு, அவர்களை கொலை செய்து வீசியதையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். சடலமாக கிடந்தது தேனியை சேர்ந்த மணிகண்டன்-பிரேமலதா தம்பதிகள் என்பதும் மணிகண்டனுக்கு தேவராஜ் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்ததோடு அவரது நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்ததும் தெரியவந்தது. வாரிசு இல்லாத நிலையில் மணிகண்டன் தம்பதிகள் செல்வ செழிப்போடு வாழ்ந்து வர தேவராஜின் கண்களை உறுத்தியிருக்கிறது.
My V3 Ads நிறுவனத்தில் மணிகண்டன் வேலை பார்த்து வர மோசடி புகாரில் சிக்கி அதன் நிறுவனர் கைதானார். கைதாவதற்கு முன்பாக பல கோடி பணத்தை தனது வங்கிக்கணக்கில் இருந்து மணிகண்டனின் வங்கிக்கணக்கிற்கு TRANSFER செய்ததாகவும் ஆனால் ANDROID போனை இயக்குவதில் சிரமத்தை சந்திக்கும் மணிகண்டனால் அப்பணத்தை எப்படி எடுப்பது என தெரியாமல், தேவராஜின் உதவியை நாடியதாகவும் தெரிகிறது.
ஏற்கெனவே மணிகண்டனின் பணத்தில் மீது குறியாக இருந்த தேவராஜுக்கு சந்தர்பம் கைக்கூடி வர, கூட்டளிகளை சேர்த்துக்கொண்டு மணிகண்டன் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எப்படியாவது அடித்துவிட வேண்டும் என திட்டம் போட்டதும் விசாரணையில் அம்பலமாகியது. இதையடுத்து பொய்யான ஒரு காரணத்தை கூறி மணிகண்டன் தம்பதிகளை காரில் அழைத்துச்சென்ற தேவராஜ், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பணத்தை TRANSFER செய்ய முயன்றிருக்கின்றனர். ஆனால் மோசடி புகாரில் சிக்கிய My V3 Ads நிறுவனத்தின் அனைத்து வங்கிக்கணக்குகளும் போலீசாரால் முடக்கப்பட்ட நிலையில் செல்போனில் PIN NUMBER ERROR என காட்டியதாக தெரிகிறது.
மணிகண்டன் தான் பொய்யான PIN NUMBER-ஐ கூறுவதாக நினைத்து அடித்து டார்ச்சர் செய்த கும்பல் ஒருகட்டத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் பணத்தை TRANSFER செய்ய முடியாமல் திட்டம் வீணாய் போன ஆத்திரத்தில், இருவரையும் ரத்தம் தெறிக்க கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டிய கும்பல் சடலங்களை எப்படி DISPOSE செய்வது என தெரியாமல் காரில் போட்டுக்கொண்டு 2 நாட்களாக பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததும், உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சிப்காட் பகுதியில் சடலத்தை வீசிச்சென்றதும் விசாரணையில் அம்பலமானது. இரட்டை கொலை தொடர்பாக தேவராஜ், அஸ்வின், சபரி, பிரவீன்குமார், நந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தேவராஜ் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று தவறிவிழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

