

அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை, இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்ற நிலையில், ரெட்ட தல திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.