Dhurendar
சினிமா
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம்
இந்திய சினிமா வரலாற்றில் 900 கோடியை கடந்த 11-ஆவது திரைப்படம் என்ற பெயரை துரந்தர் இடம்பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் 935 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி 20 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் 607 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளாதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொடும் என கூறப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் 900 கோடியை கடந்த 11-ஆவது திரைப்படம் என்ற பெயரை துரந்தர் இடம்பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
