

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராசி திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே 'மதராஸி' திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது