

ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு திரைப்படம் வெளியான பிறகும் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தின் ரிலீசை அடுத்து ஒரு வாரம் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.