Nellai well issue
மாவட்ட செய்திகள்
கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது விபத்து தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்
செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றினை ஆழப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள லிப்டில் திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்ததில், 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.
நெல்லை மாவட்டம் வெள்ளாளன்குளத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றினை ஆழப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள லிப்டில் திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்ததில், 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.
