15
15

காட்டாற்று வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்... 3 பேரும் காரின் மேல் ஏறி தத்தளித்த வீடியோ காட்சி வெளியீடு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Published on: 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சூழலில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த காரின் மேல் ஏறி 3 பேரும் தப்பித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கேரளாவை சேர்ந்த ராஜேஷ், அருண் தாமஸ், ஆண்ட்ரூ ஆகியோர் கூடலூர் ஓவேலி பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு திரும்பும் வழியில், தர்மகிரி ஆற்றை கடக்க முயன்றனர்.

அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் சிறிது தூரத்தில் கற்களுக்கு இடையே மாட்டி நின்றது.

இதையடுத்து, காரின் மேல் பகுதியில் ஏறி தப்பித்த 3 பேரும் கூச்சலிட்டதைக் கேட்டு, கிராம மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

newstamil.tv