CBE Well issue
CBE Well issue

கனமழையால் 20 அடி ஆழம் உள் வாங்கிய விவசாய கிணறு

கிணற்றுக்கு முன்னும் பின்னமாக குடியிருப்புகள் உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயமும் எழுந்துள்ளது.
Published on: 

கோவை மாவட்டம் அன்னூரில் கனமழை காரணமாக, சாலை ஓரத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த விவசாய கிணறு திடீரென இருபது அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. கிணற்றின் பாதுகாப்புக்காக நெடுஞ்சாலைத்துறை அமைத்திருந்த தடுப்பு சுவரும் உள்வாங்கி இடிந்து விழுந்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் கிணற்றுக்குள் விழும் அபாயம் எழுந்துள்ளதால், அந்தப் பகுதியில் தற்காலிகமாக பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்வாங்கிய கிணற்றுக்கு முன்னும் பின்னமாக குடியிருப்புகள் உள்ள நிலையில், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயமும் எழுந்துள்ளது.

newstamil.tv