

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பணத்தை திருடியதாக சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பணத்தை திருடியதை அச்சிறுவன் ஒப்புக் கொள்வது போன்று வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சின்னஅழகுபுரத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன், கடந்த 12ஆம் தேதி சில வீடுகளில் 7 ஆயிரம் ரூபாய் திருடியதாக தினேஷ், மோகன், அருள்மணி உள்ளிட்டோர் சிறுவனை தாக்கியதுடன், தட்டிக் கேட்ட அவனது உறவினர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது சிறுவன் ஒப்புக் கொண்டது போல் வீடியோ வெளியான நிலையில், சிறுவனை மிரட்டி வீடியோ எடுத்துள்ளதாக அவனது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.