20
20

தலைமைச் செயலாளர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: 

கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து குழு அமைக்க, கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கை தாமாக விசாரிப்பதில் தர்மசங்கடமாக உள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், திருத்தம் செய்த நகலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

newstamil.tv