MYD Issue
MYD Issue

மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு

தலையில் காயம் அடைந்த கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Published on: 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், கொத்தனாரை கட்டையால் அடித்து கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். திருத்தோணிபுரத்தை சேர்ந்த கொத்தனார் கண்ணன், அதே பகுதியை சேர்ந்த ராஜாவுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில், கண்ணனை, ராஜா கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் காயம் அடைந்த கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

newstamil.tv