

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்த காட்டுயானைகளால், அவ்வழியே சென்ற சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். சாலையை கடந்த யானைக்கூட்டம் தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த நிலையில் பல மணி நேரம் போராடி காட்டுப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் எவரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.